No results found

    பேராவூரணியில், விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு கூட்டம்


    பேராவூரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் விளக்க உரையாற்றினார். இக்கூட்டத்தில், உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூ.60, கொப்பரை ஒரு கிலோ ரூ. 200 என மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்து தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000 விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பன்னீர்செல்வம், முருகேசன், தங்கராஜ், தேசகாவலன், ரவி, கருணா மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி , இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال