No results found

    ஆலக்குடியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


    தஞ்சாவூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசியதாவது:- பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண்குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை தாமாக முன்வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும். தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

    பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கபடுவார்கள். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் . பொதுமக்களுக்கு உண்டான பிரச்சனைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன், வக்கீல் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பேசினர். இம்முகாமில் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார். முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال